சென்னை அரும்பாக்கம் மேம்பாலம் வழியாக சென்ற குடிநீர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில், 36 ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் கொட்டி வீணாணது.
லாரியிலிருந்து வெளியே குதித்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார்.
30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் உணவகம் ஒன்றுக்கு 36 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஏற்றி சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.