அரசுப் பணிக்கு நிலம் லஞ்சமாகப் பெற்றது தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி, அவரது மகள் மிஸா பார்தி, தொழிலதிபர் அமித் கத்யால் உள்ளிட்டோர் பிப்ரவரி 9-ஆம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரும் அவரது குடும்பத்தினரும் அரசுப் பணிக்கு நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக அமலாக்கத் துறை வழக்குத் தொடுத்துள்ளது.