ஈரானுடன் போர் நடத்த விரும்பவில்லை, அதன் செயல்களுக்கு பதிலடி கொடுக்கவே அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரானுக்கு பதிலடி தரப்படும் என்று கூறினார். சிரியா எல்லையில் அமெரிக்க ராணுவ முகாம் மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
40 வீரர்கள் படுகாயம் அடைந்தனர் . தெற்கு கரோலினாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க வீரர்கள் மீதான டிரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.