​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசு வழங்க முன்வரும் பள்ளிகளை வேண்டாம் என்கிறது தமிழக அரசு : அண்ணாமலை

Published : Jan 30, 2024 7:10 AM

மத்திய அரசு வழங்க முன்வரும் பள்ளிகளை வேண்டாம் என்கிறது தமிழக அரசு : அண்ணாமலை

Jan 30, 2024 7:10 AM

தமிழக அரசுப் பள்ளிகளில் 11 ஆயிரத்து 700 வகுப்பறைகள் குறைவாக இருப்பதாகக் கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையை கவனிக்காமல் சினிமா ஷூட்டிங் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுக்கே அதிக நேரம் ஒதுக்கிறார் எனக் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் என் மண், என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க வந்த அண்ணாமலைக்கு அப்பகுதி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடையே பேசிய அண்ணாமலை, பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகளை கேட்டுப் பெற்றுள்ள நிலையில், தமிழகம் மட்டும் தங்களுக்குப் பள்ளிகள் வேண்டாம் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார்.