நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 9ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் எம்.பி.க்களின் கூட்டுக் கூட்டத்தில் நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் புதிய அரசின் முழு பட்ஜெட்டிற்காக ஒத்தி வைக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.