புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பெட்டிக்கடையில் தகராறு செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று கடையை சூறையாடி கடை உரிமையாளரையும் தாக்கி மிரட்டிச்சென்றனர்.
இதில் கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.