முதன்முறையாக ஒரே சமயத்தில் 3 செயற்கைக்கோள்களை ஈரான் விண்ணில் ஏவி உள்ளது.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உபகரணங்களை விண்வெளிக்கு எடுத்து செல்லவும், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இந்த செயற்கைக்கோள்களை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்குமுன், இம்மாதம் சொரயா என்ற செயற்கைக்கோளை ஈரான் ஏவிய போது செயற்கைக்கோளை ஏவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடிவமைக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின.