பதிலுக்கு பதில் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தானும் ஈரானும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசேன் அமீர் அப்துல்லா பாகிஸ்தான் அரசின் அழைப்பின் பேரில் நேற்று இஸ்லாமாபாத் வந்துள்ளார்.
இன்று அவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக்கையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.கடந்த ஜனவரி 16ம் தேதி பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் ஈரான் எல்லைக்குள் பலூசிஸ்தான் விடுதலை முன்னணி முகாம் மீது ஏவுகணைகளை வீசியது.