தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பாரம்பரிய சுரங்கத் திருவிழா கோலாகலமாக நடந்தது.
பொட்டோசி நகரில் திரண்ட தொழிலாளர்கள், சுரங்கத்தில் பயன்படுத்தும் உபகரணங்களை கையில் ஏந்திக் கொண்டு ஆடி மகிழ்ந்தனர்.
சுரங்கத்தில் தொழிலாளர்களை காக்கும் கடவுளை நினைவு கூர்ந்து பெண் தொழிலாளர்கள் நடனம் ஆடினர்.
விபத்து நேரிடாமல் காக்கும் இறை தூதரை போற்றும் வகையில் கையில் விலங்கு மாட்டிக் கொண்டு, தொழிலாளர்கள் வானை நோக்கி பிரார்த்தனை செய்தனர்.