ஈரானில் சிஸ்டான் - பலுசிஸ்தான் மாகாணத்தில் சரவான் நகரில் பாகிஸ்தானியர்கள் ஒன்பது பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும், ஈரான் அரசின் முழு ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது முடாசிர் திப்பு தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வேலை பார்த்துவந்த வாகன பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாகவும்,துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக மூன்று பேரை போலீஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.