​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூன்று மொழி கற்பதால் தமிழ் எப்படி அழியும்?: அண்ணாமலை

Published : Jan 27, 2024 10:14 PM

மூன்று மொழி கற்பதால் தமிழ் எப்படி அழியும்?: அண்ணாமலை

Jan 27, 2024 10:14 PM


கர்நாடகாவில் மும்மொழி கற்பதால் கன்னடம் அழியவில்லை, கேரளாவில் மும்மொழி கற்பதால் மலையாளம் அழியவில்லை என்ற போது, தமிழகத்தில் மும்மொழி கற்றால் தமிழ் அழிந்துவிடும் என்பது எந்த வகையில் சரி என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அவர், தமிழக மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வேலையை இங்குள்ள அரசியல்வாதிகள் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து விழுப்புரத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய அண்ணாமலை, பாஜகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி போல கட்டமைப்பதாகவும், ஆனால் எட்டு இஸ்லாமிய நாடுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருதுகளை அளித்துள்ளன என்றும் கூறினார்.