எதிர்க்கட்சியாக இருக்கும் போது இந்தி தெரியாது போடா என்பதும், ஆளுங்கட்சி ஆனவுடன் இந்தி தெரியும் வாடா என்பதும் தான் திமுகவின் கொள்கையாக உள்ளதாக சீமான் கூறினார்.
நெல்லையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் இதனை தெரிவித்தார்.
நீட் விலக்கு கேட்டு பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்தை பிரதமரை சந்தித்த போது வழங்காமல் சேலம் மாநாட்டில் கண்காட்சியாக வைத்ததது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.