அமெரிக்காவில் நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அந்நாட்டில் கொலை வழக்கின் குற்றவாளி ஒருவருக்கு முதன் முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இறந்தவர் அருகில் இருந்த மதபோதகர், பல நிமிடங்கள் துடிதுடித்த பிறகே உடலில் உயிர் பிரிந்ததாகவும், அந்த நேரத்தில் தண்ணீரில் இருந்து வெளியே போடப்பட்ட மீன் போன்று குற்றவாளி துடித்ததாகவும் தெரிவித்தார்.
இது கவலையளிக்கும் வகையில் உள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையமும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.