மலிவு விலையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டித்தும், உள்நாட்டு விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கேட்டும் பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், முக்கிய சாலைகளில் டிராட்க்டர்களை நிறுத்தியும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டி தீவைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் பாரிஸ் நோக்கி செல்லும் சாலைகளில் டிராக்டர் பேரணி நடத்தி, அதிக ஒலி எழுப்பி அரசின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர்
ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பிரான்ஸில் வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பிரச்சனைக்கு தீர்வு காணாமல், அரசு மவுனம் சாதிப்பதாக கூறி, முக்கிய இடங்களில் குப்பைகளை கொட்டி அவர்கள் தீ வைத்தனர்.