”லால் சலாம்” படத்தின் இசை வெளியீட்டு விழா பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தந்தையை, குறிப்பிட்ட ஒரு வார்த்தையை சொல்லி சிலர் தவறாக அடையாளப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மாறாக ரஜினி ஒரு மனிதநேயவாதி என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினியை சிலர் சுட்டிக்காட்டுவதுபோன்று அவர் இருந்திருந்தால், கண்டிப்பாக, லால் சலாம் படத்தை அவர் பண்ணியிருக்க முடியாது என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ரஜினி ரசிகரும் பெருமைபடுகிறதுபோன்று, லால்சலாம் படம் இருக்கும் என்றும் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.