காஸா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும் இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக அளவில் வாழ்வாதார உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டது.
தனது பிடியில் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுவிக்கவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்ற பாலஸ்தீன உதவி அமைச்சர் அம்மர் ஹிஜாஸி, மனிதகுலத்துக்கு இது ஒரு நல்ல நாள் என்றும், இந்தத் தீர்ப்பு இஸ்ரேலுக்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், போர் நிறுத்தம் குறித்து சர்வதேச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காதது குறித்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் வருத்தமும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.