பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜனவரி மாதம் மட்டும் அங்கு 220 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடும் குளிர் நிலவிவருவதால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிமோனியா தடுப்பூசி செலுத்தாதது, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் குழந்தைகள் அதிகளவில் மடிவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவால் பள்ளிக்கூடங்களில் காலை பிரார்த்தனை கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.