ஒடிஸா மாநிலம் கொராபுட் மாவட்டம் போரிகும்மா சாலையில் சேர்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்...மேலும் பலர் காயமடைந்தனர்.
அதிவேகமாக வந்த சொகுசு கார் முன்னே 15 பேருடன் சென்றுகொண்டிருந்த ஆட்டோவை கடக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீதும் எதிரே வந்த இரு பைக்குகள் மற்றும் டிராக்டர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பைக்கில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். காரும் ஆட்டோவும் கவிழ்ந்தன. 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.