விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரியும், தடையற்ற வர்த்தக கொள்கையை அறிவிக்கக் கோரியும் பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாரீஸ் நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகளில் விளை பொருட்கள் மற்றும் குப்பைகளை கொட்டி போக்குவரத்தை அவர்கள் முடக்கினர்.
பிரான்ஸ் உளவுத்துறை எச்சரித்தும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண அரசு தரப்பில் முயற்சி எடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.