​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. எம்.எல்.ஏ மகனையும் மருமகளையும் பிடிக்க போலீஸின் சாமர்த்தியம்..!

Published : Jan 26, 2024 4:07 PM



இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. எம்.எல்.ஏ மகனையும் மருமகளையும் பிடிக்க போலீஸின் சாமர்த்தியம்..!

Jan 26, 2024 4:07 PM

வீட்டில் பணிப்புரிந்த சிறுமியை கொடுமை படுத்திய புகாரில் சிக்கி, ஊரை மாற்றி காரை மாற்றி தப்பி ஓடிய எம்எல்ஏவின் மகன், மருமகள் கைது செய்யப்பட்டதின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா . அடுக்குமாடி குடியிருப்பில் தனிக்குடித்தனம் நடத்திவரும் இவர்களது வீட்டில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வீட்டு வேலை செய்து வந்த நிலையில், அந்த சிறுமியை சூடு வைத்து சித்தரவதை செய்தும், நிர்வாணமாக்கி அடித்து கொடுமை செய்ததாகவும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 18 ந்தேதி தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் எம்.எல்.ஏவின் மகனும், மருமகளும் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை இருவரையும் தனிப்படை போலீசார் ஒசூர் அருகே கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இன்று காலை நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தியப்போது இருவருக்கும் பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து எம்.எல்.ஏவின் மகனும். மருமகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ரமணா பட பாணியிலான டெக்னிக்கை கையில் எடுத்து போலீசார் இருவரையும் கண்டறிந்து கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்ட்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் தலைமறைவாகி தனிப்படைகள் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் இருவரும் பாண்டிச்சேரி சென்று அதன் பின்னர் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வழியாக ஆந்திரா சென்றதை அறிந்து ஒரு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று தேடியுள்ளனர்.

இருவரும் அங்கும் கிடைக்காததால் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது செல்போன் பள்ளிகொண்டாவிலேயே சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதும் அதன் பிறகு செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தொடர்ச்சியாக ஆண்ட்டோ மதிவாணனின் நண்பர்கள், மெர்லினாவின் பெற்றோர்களிடத்தில் இரு தினங்களாக விசாரணை நடத்தினர். குறிப்பாக மெர்லினாவின் தந்தை அந்தோணியை காவல் நிலையத்திலேயே போலீசார் அமர வைத்ததாக கூறப்படுகின்றது.

ஆண்ட்டோ மதிவாணனின் நண்பர்கள் மொபைல் போன் மற்றும் மெர்லினாவின் அப்பா அம்மா மொபைல் போன்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினர். அதில் பல்லாவரம் ஆண்ட்டோ மதிவாணனின் நண்பரான ரித்விஷ் என்பவருக்கு கடந்த சில நாட்களாக புதிய எண்ணில் இருந்து நாள் ஒன்றுக்கு மூன்றில் இருந்து ஐந்து கால்கள் வரை பதிவாகி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக ரித்விஷிடம், போலீசார் ஒரு நாள் முழுவதும் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ரித்விஷ் மூலமாக அவரது பெயரிலேயே ஒரு சிம்கார்டு வாங்கி அவரது நண்பர்கள் அங்கு சென்று புதிய சிம் கார்டை கொடுத்ததும் பின் பழைய சிம் கார்டை கொடுத்துவிட்டு மதிவாணன் சென்ற காரை வாங்கிக்கொண்டு தங்களது காரை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

புதிய சிம் கார்டுடனும், நண்பர்கள் கொடுத்த காருடன் சித்தூர் , பள்ளிகொண்டா என ஊரை மாற்றிக் கொண்டு விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் அவரது நண்பர் மூலமாகவே ஆண்ட்டோ மதிவாணனுடன் செல்போனில் பேச செய்தனர். மெர்லினாவின் தந்தை அந்தோணியை ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் மெர்லிணா வந்தால் தான் விடுப்விப்பார்கள் என்றும் நண்பர்கள் மூலமாகவே தெரியப்படுத்தி உள்ளனர்.

இதனால், அதிர்ச்சியுற்ற அவர்கள் வேறு எங்கும் தப்பிச்செல்ல மனமில்லாமல் அங்கேயே முடங்கிப்போய் இருந்ததாகவும், ஓசூர் பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார் , விடுதிக்கு சென்று ஆண்ட்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.