காங்கிரஸ் கட்சி வலிமை இழந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும் என புதுச்சேரியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசினார்.
புதுச்சேரியில் திமுக ஆட்சி கண்டிப்பாக அமையும் என பேசிய ராஜகண்ணப்பன், இதற்காக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வருத்தப்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.