உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கால நிலை மாற்றத்தால், அங்கு கோடை காலத்தில் கனமழை பெய்து, ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு காய்ச்சல் பரவல் 240 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த நகர வீதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.