தைவானில், கட்டாய ராணுவ சேவையில் இணைவதற்காக புறப்பட்ட இளைஞர்களை பெற்றோர் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பிவைத்தனர். ராணுவ முகாம் வந்த இளைஞர்களின் தலை முடி மழிக்கப்பட்டு, ராணுவ சீருடை வழங்கப்பட்டது.
தைவானில், 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், கட்டாயம் 4 மாதங்கள் ராணுவ சேவை ஆற்ற வேண்டும் என சட்டம் உள்ள நிலையில், சீன ராணுவத்தின் அண்மை கால அச்சுறுத்தலால் அது 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.