பாகிஸ்தானின் லாகூர் நகரில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்ற தேர்தல் பிரசாரத்தில் அவரது தொண்டர்கள் நிஜ புலி மற்றும் சிங்கத்துடன் கலந்துகொண்டனர்.
கட்சியின் சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிங்கம், புலியுடன் கலந்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். கூண்டுக்குள் அடைத்துக் கொண்டுவரப்பட்ட விலங்குகளுடன் தொண்டர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
நவாஸ் ஷெரீப் அறிவுறுத்தலின் பேரில், சிங்கம் மற்றும் புலியை தொண்டர்கள் திருப்பிக் கொண்டுசென்றனர். பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீம்-நவாஸ் கட்சி போட்டியிடும் நிலையில், தீவிர பிரசாரத்தில் நவாஸ் ஷெரீப் ஈடுபட்டுள்ளார்.