தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான இயக்கம் என்ற பொய் பிரசாரத்தை நம்பாதீர்கள் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில், 4 ஆயிரத்து 142 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி பேசிய அவர், மதத்துக்காக, அரசியலுக்காக மக்களை பயன்படுத்துவது யார்? மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான ஆட்சி எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்.