தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோயிலில் பக்தர்களின் இறை முழக்கத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாஜலபதி கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், ராராமுத்திரைக்கோட்டையில் உள்ள குளுமதுரை அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், தொழுவத்துமேடு முத்தழகி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கரிம்பேடு கிராமத்தில் கோதண்டராம சுவாமி கோயில் மற்றும் ஜனபன் சத்திரம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.