சென்னை சூளையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கத்திலிருந்து செயல்படுவதாக ஏற்கனவே அளித்த வாக்குறுதியை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், அயோத்தி ராமர் கோயில் திறப்பின் போது தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட பாஜகவின் எண்ணம் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.