திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த ரவுடி மாதவன், திருவானைக்கா சன்னதி வீதியில் உள்ள கைலாசம் மண்டபத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலையில் வெட்டிக் கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் மண்டைவெட்டி மாதவன் என்று அடைமொழி கொண்ட அவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.