ஆந்திராவின் புத்தூர் நகர்மன்றத் தலைவர் பதவியை பெற்றுத் தருவதாக கூறி, ஆந்திர அமைச்சர் ரோஜா தன்னிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவருடைய கட்சி கவுன்சிலர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி 17 ஆவது வார்டு உறுப்பினரான புவனேஸ்வரி, நகர்மன்ற தலைவர் பதவி தொடர்பாக ரோஜாவை தான் அணுகிய போது அந்த பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கண்டிப்பாக பெற்றுத் தருவதாகவும், உறவினரான குமாரசாமியை சந்திக்குமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
70 லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசிய குமாரசாமி தனது உதவியாளர் சத்யா மூலமாக 2 தவணையாக பணம் பெற்றுக் கொண்டும், பதவியை பெற்றுத் தராததோடு, பணத்தையும் திருப்பித் தரவில்லை என தெரிவித்த புவனேஸ்வரி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார்.