பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 10 கோடி வீடுகளில் கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டதால், பெண்களின் கெளரவம் காக்கப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னிமலையில் நடைபெற்ற ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. மகளிர் மாநாட்டிற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வானதி, தமிழகத்தில் முத்ரா திட்டத்தில் பெண்களே அதிக கடன் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.