அமைச்சர் உதயநிதி கூறுவது போல், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல் ஊற்றெடுக்கும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இனி ஒரே கட்சி, .அதுவும் பாஜக தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே 100க்கு 3 அல்லது 4 மதிப்பெண் வாங்கும் கட்சிகளாக உள்ள நிலையில், பா.ஜ.க. நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் கட்சியாக விளங்குவதாக அவர் கூறினார்.ந்