​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் தங்கியிருந்த ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்து

Published : Jan 23, 2024 2:44 PM

இந்தியாவில் தங்கியிருந்த ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்து

Jan 23, 2024 2:44 PM

மிசோரம் மாநிலத்தில் ஐசால் அருகே உள்ள லெங்புயி விமான நிலையத்தில் மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் காயமடைந்தனர்.

மியான்மரில் இந்திய எல்லை அருகே உள்ள ராணுவ முகாம்கள் மீது கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலின்போது 276 ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் தப்பி வந்தனர்.

லாங்தலாய் மாவட்டத்தில் உள்ள காவல் துறை முகாமில் தங்க வைக்கப்பட்ட அவர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் தரையிறங்கும்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 14 பேரில் 6 பேர் காயமடைந்ததாக மிசோரம் காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.