பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுக்க, சென்னை மாநகரில் இயக்கப்படும் அனைத்து சாதாரண பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பணிமனையில், தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட பேருந்துகளைப் பார்வையிட்ட அவர், முதற்கட்டமாக 42 சாதாரண பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.