மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், வெளிநாட்டினர் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய போதைபொருள் கடத்தல் மன்னன் ரிகோபெர்டோ-வுக்கு 800 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு, அண்டை நாடான நிகரகுவாவில் இருந்து குவாத்தமாலாவுக்கு வந்த பேருந்தில் போதை மருந்து கடத்தப்படுவதாக நினைத்து, பேருந்தை சோதனையிட்ட கடத்தல் காரர்கள், போதை மருந்து இல்லாததால் 16 பயணிகளை சுட்டுக்கொன்றுவிட்டு உடல்களை தீயிட்டு கொளுத்தினர்.
13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கூட்டத்தின் தலைவன் ரிகோபெர்டோ-வை போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர். ஒரு கொலைக்கு 50 ஆண்டுகள் வீதம் அவனுக்கு 800 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.