இலங்கை வழியாக மாலத்தீவுக்கு பயணிக்கும் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
கடந்த காலங்களில் இந்தியாவின் ஆட்சேபத்தை மீறி இரண்டு முறை சீனக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தன. மாலத்தீவுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை சீனா பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் சீனா சென்ற மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் மாலத்தீவு நோக்கி சீனக் கப்பல் ஒன்று இந்தோனேசியா வழியாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் நேற்று காலை வந்தது. இதையறிந்த இந்தியக் கடற்படையினர் அக்கப்பலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.