எஸ்.பி.க்களின் வாட்ஸ்ஆப் குழுவில் போடப்பட்ட ஆர்டர்! அண்ணாமலை குற்றச்சாட்டு!!
Published : Jan 22, 2024 4:03 PM
எஸ்.பி.க்களின் வாட்ஸ்ஆப் குழுவில் போடப்பட்ட ஆர்டர்! அண்ணாமலை குற்றச்சாட்டு!!
Jan 22, 2024 4:03 PM
ராமர் கோயில் விழாவை தமிழகத்தில் கொண்டாடாமல் ஆக்கப்பூர்வமான முறையில் தடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களின் வாட்ஸ்ஆப் குழுவில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் உத்தரவு பிறப்பித்திருந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் கிருஷ்ணன் கோயிலில் ராமர் கோயில் விழாவை எல்.இ.டி. மூலம் பார்ப்பதற்காக வந்த அண்ணாமலை, கோயிலுக்குள் நடக்கும் நிகழ்வால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாத போது, அதை தடுக்க தி.மு.க. அரசு முயற்சிப்பது ஏன் என்று கேட்டார்.
ஹிந்து ஒருவர் ஆட்சேபனை தெரிவிப்பதற்காக சிறுபான்மையினரின் நிகழ்வுகளை நிறுத்த முடியுமா என்று வினவிய அவர், தி.மு.க. அரசு மேற்கொள்ளும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை சிறுபான்மையினரே விரும்பவில்லை என்றார்
குடும்ப விழா போல நடந்து முடிந்த சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில் அமைதியாக நடத்தப்படும் கோயில் விழாவால் அசம்பாவிதமும் அசவுகரியமும் நேரிடும் என்று எப்படி சொல்ல முடியும் என்று அவர் வினவினார்.