​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் இடிந்து விழுந்த புதிய வீடு.. கிரகப் பிரவேசம் வைத்திருந்த நிலையில் சோகம்..!

Published : Jan 22, 2024 3:35 PM



புதுச்சேரியில் இடிந்து விழுந்த புதிய வீடு.. கிரகப் பிரவேசம் வைத்திருந்த நிலையில் சோகம்..!

Jan 22, 2024 3:35 PM

புதுச்சேரியில் புதிய வீடு இடிந்து விழுந்தது

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் கார் ஓட்டுநர் சுரேஷ் புதிதாக கட்டிய வீடு இடிந்து விழுந்தது

பிப்.1 ஆம் தேதி கிரகப் பிரவேசம் வைத்திருந்த நிலையில் 2 அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது

இடிந்து விழுந்த போது வீட்டின் அருகே யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

வீட்டின் அருகே உப்பனாறு வாய்க்காலை தூர்வாறும் பணி நடைபெற்று வந்தது

வாய்க்கால் தூர்வாறும் பணியால் வீடு சேதமடைந்து இடிந்து விழுந்ததாக குடும்பத்தினர் புகார்

நிவாரணம் வழங்கக் கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சர் லட்சுமிநாராயணன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக வீடு இடிந்து விழுந்ததா என விசாரணை