​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. 13.60 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு

Published : Jan 22, 2024 2:44 PM

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. 13.60 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு

Jan 22, 2024 2:44 PM

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சம் பேர், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சம் பேர், மூன்றாம் பாலினத்தவர் எட்டாயிரம் பேர் என மொத்தம் 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பதிமூன்றரை லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அவற்றை மேற்கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.