​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.கவில் 4 தனித்தனி குழுக்கள் அமைப்பு - எடப்பாடி பழனிசாமி

Published : Jan 22, 2024 2:07 PM

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.கவில் 4 தனித்தனி குழுக்கள் அமைப்பு - எடப்பாடி பழனிசாமி

Jan 22, 2024 2:07 PM

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.கவில் 4 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்பட 10 பேர் கொண்ட குழுவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை உள்பட 10 பேர் கொண்ட குழுவும், தேர்தல் விளம்பரத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.