​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமபிரான் கோவிலில் ஆரத்தி நடைபெறும் நேரம் அறிவிப்பு

Published : Jan 22, 2024 7:47 AM

ராமபிரான் கோவிலில் ஆரத்தி நடைபெறும் நேரம் அறிவிப்பு

Jan 22, 2024 7:47 AM

அயோத்தி ராமர் கோவில் நாளை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. இந்நிலையில் கோவில் நேரம் மற்றும் ஆரத்தி நடத்தப்படும் நேரத்தைஅறிய பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் வெளியிட்ட அட்டவணைப்படி காலை 6.30 மணிக்கு ராமபிரானை பள்ளியில் இருந்து துயில் எழுப்பும் ஜாக்ரன் ஆரத்தி நடைபெறும் .இறைவனுக்குப் படையலிட பகல் 12 மணிக்கு போக் ஆரத்தியும் மாலை 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியும் நடைபெற உள்ளது.

ஆரத்தியில் பங்கேற்க தொலைபேசி செயலி மற்றும் இணையம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.