தமிழக கோயில்களில் ராமர் தொடர்பான பூஜைகளுக்கும், அன்னதானத்திற்கும் தடை விதிக்கப்பட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் பேட்டியளித்த அவர், திங்களன்று எந்த திருக்கோயில்களிலும் அன்னதானம் வழங்க தடையில்லை என கூறினார்.
தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடர்பான செய்திகளை திசைத் திருப்பவே அவ்வாறு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.