​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நினைத்த எபெக்ஃட் வேற... நடந்த சம்பவம் வேற... தொழிலதிபருக்கு நடந்த டுவிஸ்ட்..! வெள்ளிவிழாவில் நிகழ்ந்த சோகம்

Published : Jan 20, 2024 8:43 PM

நினைத்த எபெக்ஃட் வேற... நடந்த சம்பவம் வேற... தொழிலதிபருக்கு நடந்த டுவிஸ்ட்..! வெள்ளிவிழாவில் நிகழ்ந்த சோகம்

Jan 20, 2024 8:43 PM

ஐ.டி நிறுவனத்தின் விழாவில் ஊழியர்களுக்கு சர்ப்ஃரைஸ் கொடுப்பதற்காக புஷ்ப விமானம் போன்ற அமைப்பிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த மும்பையை சேர்ந்த ஐடி நிறுவன அதிபர் , கயிறு அறுந்ததால் கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

வானில் இருந்து பறந்து வந்து பக்கா என்ட்ரி கொடுப்பதற்கான ஏற்பாட்டில் பிசிறு தட்டியதால் புஷ்ப விமானத்தின் இரும்பு கயிறு அறுந்து கீழே விழுந்து உயிரிழந்த விஷ்டெக்ஸ் நிறுவனர் சஞ்சய்ஷா இவர் தான்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட சஞ்சய்ஷா, அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டு தனது 21 ஆவது வயதில் நிறுவனங்களின் வருவாயை உயர்த்துவதற்கு தொழில்நுட்ப உதவி செய்யும் விஷ்டெக்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கினார். ஆப்பிள், வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி செய்து வரும் இந்த நிறுவனத்தில் சுமார் 1,600 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

நிறுவனம் துவங்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டை வெள்ளி விழாவாக இரண்டு நாள் கொண்டாட திட்டமிட்டு, அதற்காக, ஹைதராபாத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறும் ராமோஜி ஃபிலிம் சிட்டியை தேர்ந்தெடுத்தனர்

நிறுவனத் தலைவரை வானத்தில் இருந்து புஷ்பக விமானத்தில், விழா நடைபெறும் மேடையில் இறங்க வைத்து ஊழியர்களுக்கு சர்ப்ஃரைஸ் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, இரும்பு ரோப்பால் கட்டப்பட்ட ஒரு இரும்பு தொட்டியில் நிறுவனர் சஞ்சய்ஷா, நிறுவனத் தலைவர் விஸ்வநாத் ஆகியோர் சுமார் 25 அடி உயரத்திலிருந்து நெருப்பு பொறிகள் பறக்க கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தனர்.

ஊழியர்களின் பறக்கும் விசிலுக்கு இடையில் இறங்கிக் கொண்டிருந்த புஷ்ப விமானம் போன்ற தொட்டியின் ஒரு பக்க ரோப் திடீரென அறுந்ததால், சுமார் 15 அடி உயரத்திலிருந்து இருவரும் தலை குப்புற கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உற்சாகமாக துவங்கிய விழா சோகத்திற்கு மாறவே, உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விஷ்டெக்ஸ் நிறுவனர் சஞ்சய் ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார் . விஸ்வநாத் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர் போலீஸார். நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ராமோஜி ராவ் பிலிம் சிட்டி நிர்வாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.