கூகுள் நிறுவனத்தின் புதிய கட்டண முறையை எதிர்த்து 13 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கூகுள் பிளே ஸ்டோரில் சில செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை மாற்று பில்லிங் முறையில் செலுத்துவதற்கு கூகுள் நிறுவனம் 11 முதல் 26 சதவீத சேவைக் கட்டணம் வசூலித்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், வணிகப் போட்டி ஆணையம் முன்புதான் இந்தப் பிரச்னையை எழுப்ப முடியும் என்றும், நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தொடர்புடைய நிறுவனங்களின் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து மூன்று வாரங்களுக்கு நீக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.