2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தமிழகம் உட்பட 53 இடங்களில் தனியார் முதலீடுகள் மூலம் நெடுஞ்சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
சாலைகளை கட்டமைத்து, 30 ஆண்டுகள் டோல் கட்டணம் வசூலித்து முதலீட்டை திரும்ப எடுத்த பின் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கும் முறையில் இவை உருவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உ.பி., ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் ஐயாயிரத்து 214 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் 26 ஆயிரத்து 61 கோடி ரூபாய் மதிப்பில் 4 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.