​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னைவாசிகள் கவனத்திற்கு..! பிரதமர் வருகையால் தலைநகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள்.. எந்தெந்த வழியில் செல்ல வேண்டும்..? செல்ல கூடாது..?

Published : Jan 18, 2024 7:39 PM

சென்னைவாசிகள் கவனத்திற்கு..! பிரதமர் வருகையால் தலைநகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள்.. எந்தெந்த வழியில் செல்ல வேண்டும்..? செல்ல கூடாது..?

Jan 18, 2024 7:39 PM

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் நாளை மாலை சென்னை வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்தை சுற்றி உள்ள ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்ல போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்சில் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.