சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஓங் பெங் செங்கிடம் இருந்து சுமார் 4 லட்சம் சிங்கப்பூர் டாலர் அளவுக்கு வெகுமதிகளை ஈஸ்வரன் பெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் விசாரணை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கால்பந்து போட்டி, இசை நிகழ்ச்சி, சிங்கப்பூர் ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ டிக்கெட்டுகள் என பல சலுகைகளை ஈஸ்வரன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.