பிரதமர் மோடியின் கொள்கைகள் இந்திய மக்களுக்கும் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும் மிகப்பெரிய பலனை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் பாராட்டியுள்ளார்.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர், இந்தியா அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்தியாவின் வெற்றிக்கு மோடி காரணமாக விளங்குவதாக பிளிங்கென் பாராட்டினார்.