பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் அரசை பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பலுசிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் அல் அடெல் என்ற பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து, ஈரான் ராணுவம் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இருநாட்டு எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் தெரிவித்தது.
இதில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 3 சிறுமிகள் காயமடைந்ததாகவும் தெரிவித்த பாகிஸ்தான் அரசு, தங்கள் வான் பரப்பில் அத்துமீறி ஊடுருவியதற்காக விளக்கம் அளிக்குமாறு ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.