அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா 22ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முதல் தீபம் ஏற்றப்பட்டது. இன்று விநாயகர் வழிபாட்டுடன் 7 நாட்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுகின்றன.
நாளையும், நாளை மறுநாளும் பல்வேறு யாகங்கள், வாஸ்து பூஜை, நுழைவாயில் பூஜைகள், சடங்குகள் போன்றவை நடைபெறும். 20ம் தேதி நாட்டின் பல்வேறு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் 81 கலசங்களில் கொண்டு வரப்பட்டு கோவில் முழுவதும் தெளிக்கப்பட உள்ளது.21ம் தேதி ராமர் சிலை புனித நீராடப்படும்.