நல்லாட்சிக்கு அடையாளமாக விளங்குவது ராமராஜ்ஜியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி நாடே ஆன்மீக பரவசத்தில் இருப்பதாகக் கூறினார்.
ராமரின் வாழ்க்கை நெறி, ஊக்கம் அளிப்பதாகவும் பக்தியும் நம்பிக்கையும் வளர்ப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
இதுதனி நபர்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் அரசாங்களுக்கும் பொருந்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக, பிரதமர் மோடி பாரம்பரிய ஆடைகளுடன் லேபாக்சியில் உள்ள வீரபத்திரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.